(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
எதிர் வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நடைபெறவிருக்கும் எமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் காரியாளயத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் சிரமதானப் பணிகள் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைய நடைபெற்றது.
இத்திட்டத்திற்கமையசாய்ந்தமருது கடற்கரை பகுதியில் சிரமதானத்தில் மக்கள் ஈடுபட்டதை படங்களில் காணலாம்.
இந்நிகழ்வில் இப்பிரிவின் கிராம சேவகர் ஏ.கே.சனாஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா றஸானா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.