கொழும்பில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் அவரது சகோதரரும், முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸவும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பல இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு போராட்டங்களைத் தொடர்ந்து பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அதிகமாக தவிர்த்திருந்தார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப்பின் கோட்டாபய ராஜபக்ஸ பொது நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.