இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களினால் வழங்கப்படும் நிலையான வைப்பு மற்றும் கடன் வசதிகளுக்கான வட்டி வீதங்களும் மாறாமல் தற்போதுள்ள பெறுமதிகளில் தொடர்ந்தும் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மூன்று மாத காலமாக பண வீக்கம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இம்முறை நாணயமாற்றுக் கொள்கையின் போது வைப்பு மற்றும் கடன் வசதிகளுக்கான வட்டி வீதங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாணய சபையினால் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.