(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களினால் (AZ – Zuharian Past Pupils Association) முன்னெடுக்கப்பட்டு வரும் அஸ்-ஸுஹராவுடன் மீள் இணைவோம் எனும் தொனிப்பொருளில் “உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும்” வேலைத்திட்டத்தின் கீழ் (பகுதி -2) கொள்வனவு செய்யப்பட்ட Internal sound system த்தினை கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். எச். எம். அஜ்வத்தினால் கல்லூரி அதிபர் எம். எஸ். எச். ஆர் மஜீதியா தியாவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பாடசாலையினது பழைய மாணவகளின் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் “உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும்” வேலைத்திட்டத்தின் (பகுதி 1) கீழ் கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட மை குறிப்பிட தக்கதாகும்.
மேலும் இப்பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர்களுக்கென பிரத்தியோகமான WhatsApp குழுமம் ஒன்றும் உருவாக்கப்பாட்டுள்ளது இப்பாடசாலையில் ஆரம்ப கல்வியினை கற்ற மாணவ மாணவிகள் அனைவரும் கீழுள்ள லிங்க் மூலமாக இக்குழுமத்தில் இணைந்து ‘கற்பவனாய் இரு, கற்பிப்பவனாய் இரு அல்லது கல்விக்கு உதவுபவனாய் இரு’ என்ற வாசகத்திற்கு அமைவாக பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்துடன் கை கோர்த்து பாடாசாலையினது வளர்ச்சியில் நாமும் பங்காளராவோம். என பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பின் செயளாலர் தெரித்தார்.
Link: https://chat.whatsapp.com/LiasNnWIBsQ5BaMJoH4340d