நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்தன, அகிலவிராச் காரியவசம், சாகல ரத்நாயக்க மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் தேவைப்பாடு, உரப்பற்றாக்குறை, ஒளடதங்கள் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் ஆராய்வதற்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.