இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள ´Global Economic Prospects 2023´ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வறுமையால் பல குடும்பங்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுக்கான தமது செலவினங்களைக் குறைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2022 இல் இலங்கையின் உற்பத்தி 9.2% குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கைக்கான அந்நிய செலாவணி வரத்து குறைவடைந்துள்ளதால், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டுள்ளதுடன், வெளிநாட்டுக் கடனை செலுத்துவதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.