யால தேசிய பூங்கா உட்பட இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகள் எதிர்காலத்தில் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என்று வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்துக்கு டொலர்களை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்குமாறு விடயதான அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் இந்த மாதம் முதல் யால தேசிய பூங்காவில் இருந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத், அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் யால தேசிய பூங்காவுக்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை உடனடியாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.