நாராஹென்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை மிக நுணுக்கமாக எடுத்துச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டின் சந்தேகநபர் ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து வீதி போக்குவரத்து திணைக்களம் வழங்கிய பல்வேறு ஆவணங்கள், சமாதான நீதவான்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ முத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
பல்வேறு தேவைகளுக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகைத்தருவோரிடம், அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக தெரிவிப்பதோடு, கடந்த காலங்களில் நாராஹேன்பிட்ட மற்றும் பொரளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை கவனத்திற்கொண்டு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதான வாயிலுக்கு அருகில் இருந்த இனந்தெரியாத நபர்கள் பணம் மற்றும் ஆவணங்களுடன் மாயமாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பணம் மற்றும் ஆவணங்களை இழந்தவர்களில் பெரும்பாலானோர் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.