சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் 1100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேக்கின் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகைக் காலங்களில் கேக்கிற்கான கேள்வி 25 வீதத்தால் குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பண்டிகைக் காலங்களில் கேக் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறிய அவர், ஒரு சில பாரியளவான பேக்கரிகளைத் தவிர, சிறிய அளவிலான பேக்கரிகள், கேக் உற்பத்தியை கைவிட்டுள்ளதாக தெரிவித்தார்.