தாய்லாந்து வளைகுடாவில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் புயலின் போது தாய்லாந்து கடற்படை கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில், 100 க்கும் மேற்பட்ட கடற்படையினர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
HTMAS Sukhotai என்ற கப்பல் மூழ்கிய நிலையில், 33 கடற்படையினர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரச்சுவாப் கிரி கான் மாகாணத்தில், பேங் சபான் மாவட்டத்தின் கடற்கரையிலிருந்து 32 கிலோமீற்றர் (20 கடல் மைல்) தொலைவில் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.