உலக்கிண்ண உதைபந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.
இதனையடுத்து 7 ஆவது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜெண்டினா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அந்த வகையில், மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை லியோனல் மெஸ்ஸி முந்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், எதிர்வரும், 18 ஆம் திகதி இறுதி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் திகதியோடு ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிபடுத்தியுள்ளார்.