பிரேசிலின் முன்னாள் உதைபந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், ‘உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டதால் இனி பிரான்ஸ் அணி கிண்ணத்தை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கிண்ணத்தில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்’ என்றார்.
லயோனல் மெஸ்சி உலகக் கிண்ணத்தை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல’ என்றும் குறிப்பிட்டார்.
46 வயதான ரொனால்டோ உலகக்கிண்ணப் போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூறத்தக்கது.