பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளதென தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இது பெருந்தோட்ட கல்வித்துறையின் பாரிய வீழ்ச்சி என்றார்.
இன்று (12) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்ட மாணவர்கள் அதிகமாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்கள் அதிகமாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், அவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்த 1,000 ரூபாய் சம்பளமும் உரிய முறையில் கிடைப்பதில்லை என்றார்.
இந்த நிலையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் 10 சதவீதமான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை என்றும் எனவே கல்வி அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
2019, 2021ஆம் ஆண்டுகளில் கொரோனாவால் கல்வித்துறை வீழ்ச்சியடைந்ததைப் போல் இந்த வருடம் அரசியல் நெருக்கடியால் கல்வித்துறை வீழ்ச்சிக்கண்டுள்ளது என்றார்.
பெருந்தோட்ட பாடசாலைகள் மற்றும் ஹட்டன், நுவரெலியா கல்வி வலயங்களின் கீழ் உள்ள பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சி குறித்து இதுவரை எவ்வித ஆராய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.
அதேப்போல் பெருந்தோட்ட கல்வித்துறை தொடர்பில் மலையக அரசியல்வாதிகளும் அக்கறை காட்டுவதில்லை.