ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் விலை வரம்பை விதிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற பிராந்திய உச்சிமாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் எந்த நாட்டிற்கும் எண்ணெயை விற்காது என்று ஜனாதிபதி புடின் இதன்போது தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விலை வரம்பை ஒரு முட்டாள்தனமான முடிவு என்று அவர் விபரித்தார்.
ஜி-7, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், உக்ரைனில் அதன் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனைக் குறைக்கும் நோக்கில் ரஷ்ய எண்ணெயின் மீது ஒரு பீப்பாய்க்கு 60 டொலர்கள் என்ற விலை வரம்பை விதித்தன.