இந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 162ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் புதிய மதிப்பீடுகள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
சியாஞ்சூரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஒற்றை மற்றும் இரண்டு மாடி கட்டடங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சிறிய வீடுகளில் வசிக்கின்றனர்.
வீடுகள் கடுமையாக சேதமடைந்த 13,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம், தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து தென்கிழக்கே 75 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கு அருகில் இருந்தது. இப்பகுதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.