அதிக குடிநீர் கட்டணம் தொடர்பான வாக்குவாதம் முற்றியதில் குடிநீர்மானி வாசிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் இன்று (நவ.10) காலை கைது செய்யப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் வடக்கு பயாகல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.