காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சற்று முன்னர் சந்தித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோர்க்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்லோவேனியா ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.