கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 156,400 ரூபாவாக குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் டொலரின் பெறுமதி அதிகரித்தன் பின்பு இதுவே குறைந்த விலை என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு பவுண் தங்கம் 22 கரட் 175,000 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 190,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய (01) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,650 டொலர்களுக்கு கீழ் குறைந்துள்ளது.