பால்மா மற்றும் திரவ பால் சந்தைக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் பால்மா விநியோகஸ்தர்களுக்கு இடையில் நேற்று வர்த்தக அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பால்மா பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் இதன்போது அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, சந்தையில் பால்மா விநியோகத்தை அதிகரிக்க அல்லது திறந்த கணக்கு முறையின் கீழ் பால்மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஊடாக டொலருக்குரிய சலுகைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.