அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர், சுத்தியலால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுக்குள் புகுந்த ஒருவரால் தாக்கப்பட்ட 82 வயதான பெலோசி, தலை மற்றும் வலது கையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபர் சன் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்த பின்னர், சபாநாயகர் நான்சி பெலோசியைப் பார்க்க வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டில் 42 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் தாக்குதலுக்கான எந்த உள்நோக்கமும் தெரியவில்லை.
தாக்குதலின் போது வோஷிங்டனில் இருந்த நான்சி பெலோசி – தனது கணவரை மருத்துவமனையில் பார்க்க விமானம் மூலம் திரும்பினார்.