வன்முறையானது வன்முறையையே பிறப்பிக்கும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு நிர்வாகம் உறுதியளித்த பொருளாதார தீர்வொன்று அவசியமாகும்.
கொழும்பில் இன்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அவரது அறிக்கை வந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு முன்னால் உள்ள “மைன கோ கம” போராட்ட தளம் மற்றும் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ‘கோத கோ கமா’ போராட்ட தளம் ஆகிய இரண்டிலும் போராட்டக்காரர்களை தாக்கியதுடன், எதிர்ப்பு தொடர்பான பொருட்களை அழித்துள்ளனர்.
இன்று காலை அலரிமாளிகையில் பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து அவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.