முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பாடசாலை மாணவனை விபத்துக்குள்ளாகிவிட்டு, காயமடைந்த மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாதிவழியிலேயே விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதற்கமைய, குறித்த முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கினிகத்தேன பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதியை நேற்று (26) கைது செய்து, ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எட்டியாந்தோட்டை-மீப்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.