இன்று கொழும்பில் காலி முகத்திடலில் ‘காலிமுகத்தை ஆக்கிரமிப்பு’ போராட்டத் தளத்தை அழித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை வீசினர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகுமாறு கோரி, காலி முகத்திடலை ஆக்கிரமித்து, அமைதியான முறையில் 32ஆவது நாளாக அந்த இடத்தில் பொது மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை அலரிமாளிகையில் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கடந்த சில வாரங்களாக அலரிமாளிகைக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த அரசாங்க எதிர்ப்பு ‘மைனா கோ கம’ போராட்ட தளத்தை அழித்துள்ளனர்.
அதன் பின்னர், காலி முகத்திடலில் உள்ள ‘ஆக்கிரமிப்பு காலி முகத்திடல்’ போராட்டத் தளத்திற்குச் சென்ற அவர்கள், ‘கோட்டா கோ கம’வில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதுடன், எதிர்ப்புத் தொடர்பான பல பொருட்களையும் அழித்துள்ளனர்.
காலி முகத்திடலை ஆக்கிரமிப்பு போராட்ட தளத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த மோதல்களில் 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (நியூஸ் வயர்)