வெலிக்கந்த பகுதியில் இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கப்டன் தர அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்ல பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இராணுவத்தின் சிறப்புப் படையைச் சேர்ந்த கேப்டன் தேவிந்தா வுட்வார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.