இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் இன்று மதியம் 12.15 மணியளவில் 6 பேருடன் பயணித்தது.
கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் குறித்த, ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.