முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை தான் திருடவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சொகுசு வாகனத்தை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை, செலுத்த வேண்டியப் பணத்துக்காக எடுத்துக்கொள்ளும்படி தன்னிடம் முருத்தெட்டுவே தேரர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
வாகனத்தைத் ஒப்படைத்தமைக்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.