முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று -06- பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் ரணில் விக்ரமசிங்க கோரியதாக அவர் நேற்று -06- பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் மிரட்டுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தின் பக்கம் நின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
ரணிலும், தினேஷ் குணவர்த்தனவும் ஒன்றாக பாடசாலையில் கல்வி கற்றவர்கள் என்பதும், நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.