இலங்கை அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் கூரை சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை பொருத்துவதற்காக , இந்தியக் கடன் திட்டத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்துள்ளார் .
அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பைக் குறைப்பதற்காக அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது .
இதனையடுத்து , சில பௌத்த பிக்குகள் மின்சாரப் பாவனைக்கான கொடுப்பனவுகளை செலுத்தப்போவதில்லை என்று அச்சுறுத்தினர் .
இந்தநிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் , தேர்ந்தெடுக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் மேற்கூரை சூரிய சக்தி மின்சாரப் பிறப்பாக்கிகளை இந்தியக் கடன் வரியுடன் நிறுவ இணங்கியுள்ளது