60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் இம்மாதம் 24 அல்லது 25ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட ஏறக்குறைய 200 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி அடங்கிய மேலும் மூன்று கப்பல்கள் நவம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் இதனால் எதிர்காலத்தில் நிலக்கரி ஆலைகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் குறித்தஅதிகாரி தெரிவித்தார்.