நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் படுகாயங்களுடன் இருந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், கொலையை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.