நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார்.
பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன.
ஹர்த்தாலில் முக்கிய வர்த்தகப் பகுதிகள் மற்றும் பல முக்கிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டதுடன், ரயில்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் பொது சேவைகள் உட்பட பல பொது போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.