பிரித்தானிய ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் இந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பிரதமா் லிஸ் டிரஸ் தலைமையிலான அரசில் வா்த்தக அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கானா் பா்னஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
கன்சா்வேட்டிவ் கட்சியிலிருந்தும் அவா் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சுயேச்சை எம்.பி.யாக அவா் தொடா்ந்து செயல்படுவாா் என்று கூறப்படுகிறது.