அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அதன் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க, 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் 80 சதவீதத்தினையும் கடந்துள்ளது..
அண்மையில் இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் எவ்வித ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. எனவே அரசாங்கத்தின் பணவீக்கத்திற்கான கொடுப்பனவு வழங்க வேண்டும்.
பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.