சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பைகம பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் புகையில் கந்தகத்தின் வீதம் அதிகரித்துள்ளமையினால் நிலைமை மோசமாகியுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டதாக பைகம உள்ளூராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை நிலக்கரி பற்றாக்குறையால் இம்மாத இறுதியில் இருந்து நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது மறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.