பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2022 ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கில் உள்ள குழந்தைகள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பின்னால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி சவால்கள் காரணமாக சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தைக்காக ஒதுக்கப்பட்ட மாகாண நிதி, திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லைஎன்பதனால் சிறுவர் இலங்கைகளுக்கு அனுப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.