கட்சியின் அடுத்த சம்மேளனத்தின் போது புதிய தவிசாளர் நியமிக்கப்படுவார், ஆகவே அப்பதவியில் இருந்து பீரிஸ் நீக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும் முடிந்தால் தன்னை நீக்கி காட்டுமாறு பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.
டலஸ் அழகப்பெருமவும் இந்த சவாலை விடுத்திருந்தார்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி விடுத்துள்ள சவாலையடுத்தே இவ்வாறான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த கட்சி சம்மேளனத்தின்போது பதவிகள் பறிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுன, சூளுரைத்துள்ளது.