இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அரிய மற்றும் வரலாற்று பெறுமதி மிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட விசேட புத்தக கண்காட்சியொன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று (22) முற்பகல் 23 ஆவது கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சுதந்திர நினைவேந்தல் புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதாக நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று காலை புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சமந்த இந்திவர மற்றும் குழுவினர் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா அறக்கட்டளையின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி, புத்தக வெளியீட்டாளர்கள் சங்க உறுப்பினர்கள், விஜித யாப்பா, எச்.டி. பிரேமசிறி, ஆரியதாச வீரமன், அதுல ஜெயக்கொடி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் 400 க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளடங்கியது மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் சாவடிகளுக்குச் சென்று அவற்றைக் கவனித்தார்.
புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.