எடின்பர்க் நகரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி மீது நேரடியாக ஒரு சூரிய ஒளிக்கதிர் விழுந்த காட்சியைப் பார்த்த மக்கள் நெகிழ்ந்து போயினர்.
முன்னதாக, பிரிட்டனில் இரட்டை வானவில் தோன்றிய அரிய நிகழ்வு, மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது, நேரடியாக சூரிய ஒளிக்கதிர் ஒன்று, எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் விழுந்ததை நேரில் பார்த்தவர்களும், அந்த புகைப்படத்தைப் பார்த்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.