நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார்.
54 போட்டிகளில் அணியின் தலைராகவும் 145 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பின்ச், டி20 அணியை தொடர்ந்து வழிநடத்துவார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2013 இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஆரோன் பின்ச், அவுஸ்ரேலிய அணிக்கு 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்து கொடுத்தார்.
அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக ஓய்வை அறிவித்துள்ளதாக ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
கடந்த பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் ஆரோன் பின்ச் ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.