சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 7 அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில், இன்று முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை நாடு கிலோ ஒன்றின் விலை 194 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 279 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 429 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஆயிரத்து 350 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது..
பூண்டு கிலோ ஒன்றின் விலை 595 ரூபாவாகவும், கடலை பருப்பு கிலோ ஒன்றின் விலை 315 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக சதோச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பெருந்தோட்ட பகுதிகளை அன்மித்த சத்தோச நிறுவனங்களில் கோதுமை மா 310 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.