திருமண வீட்டுக்குச் சென்று அங்கு விருந்துபசாரத்தில் பங்கேற்ற பாடசாலை மாணவர்கள் ஐவருக்கு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த ஐவரையும் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெலிகம நகர சபையின் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விருந்துபசாரத்துக்கு அழைக்காத விருந்தாளிகளாக சென்றிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நகர சபைக்கு அண்டியதாக வசித்துவரும், 12, 13, 16 மற்றம் 17 வயதுகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நகர சபையின் மேயரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அங்குவந்த பொலிஸார், பல மணிநேரத்துக்குப் பின்னர், அந்த ஐந்து மாணவர்களையும் மீட்டுள்ளனர்.
சம்பவத்துக்கு முகங்கொடுத்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“ இந்தத் திருமண வைபவத்துக்காக கூடுதலான பேர் சமைத்தனர். அதில் மீதப்படும் உணவை உட்கொள்வதற்காக சென்றோம். இதற்கு முன்னரும் இவ்வாறு சென்றிருக்கின்றோம். சமையல் செய்யும் மாமா ஒருவரை எங்களை இன்று (06) அழைத்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினார். நாங்கள் ஐவரும் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் கொஞ்சம் இருக்குமாறு கூறினார். அப்போது வந்த மேயரும் சிலரும் எங்களை அழைத்துச் சென்று படிக்கட்டுகளில் முழந்தாளிட வைத்தனர்.