ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 5வது பாதையிலுள்ள தனிப்பட்ட இல்லத்தில் இருந்து கடந்த ஜூலை 9ஆம் திகதி வன்முறைக் கும்பல் தீ வைத்து எரித்து சூறையாடப்பட்டிருந்த வீட்டில் இருந்து திருடப்பட்ட புத்தகங்களையும் புத்தர் சிலையையும் திருப்பிக் கொடுக்க ஒருவர் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்தித் தகவல்களின்படி, பிலியந்தலையில் வசிக்கும் நபர், ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்புகொண்டு, தனது நடவடிக்கைகளின் சட்டரீதியான விளைவுகளை உணர்ந்த பின்னர், திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பாகக் கோரியுள்ளார்.
மேலும், இந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அறிவித்துள்ளனர்.