மின்சாரம், பெற்றோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிட்டு செப்டம்பர் 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
அதன்படி மின்சாரம் வழங்கல், மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொனறினால் வழங்கப்படும் சேவைகள் வழமையான பொதுமக்கள் வாழ்வை கொண்டுநடத்துவதற்கு இன்றியமையாததெனவும் மேற்கூறப்பட்டுள்ள சேவைகளுக்கு இடையூறாகக்கூடுமென அல்லது தடையாகக்கூடுமென்பதைக் கருத்திற்கொண்டு எந்தவொரு அரச கூட்டுத் தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச்சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றின் மூலம் வழங்கப்படும் பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1. மின்சாரம் வழங்கல்
2. வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள் , மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள் , வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.