கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஓகஸ்ட் மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 64.3% ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 60.8 % ஆக காணப்பட்டிருந்த நிலையிலேயே ஓகஸ்ட்டில் 64.3% ஆக உயர்ந்துள்ளது.
ஜூலை மாதம் 90.9% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7% ஆகவும் ஜூலையில் 46.5% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 50.2% ஆகவும் அதிகரித்துள்ளது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் அதிகரிப்பு 0.83% ஆகவும் உணவு அல்லாத பொருட்கள் 1.62% ஆகவும் அதிகரித்ததுள்ளது.