சிறைக் கைதிகள் இலங்கையில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல சிறைக் கைதிகள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து உயர்கல்விக்கு தகுதியான கைதிகளை வழிநடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
38 வயதுடைய சிறப்புத் தரக் கைதி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், புவியியல், இந்து நாகரிகம் ஆகியவற்றுக்கான சி சித்திகளையும் தமிழ் மொழியில் எஸ் சித்தியையும் பெற்றிருந்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 46 வயது கைதியும் பரீட்சையில் சித்தியடைந்து அரசியல் விஞ்ஞானம், பௌத்த நாகரிகம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களுக்கு எஸ் சித்தியுடன் சித்தியடைந்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.