ஜனாதிபதியும், சபாநாயகரும் குறிப்பிட்டது போன்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்),அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகிய குழுக்களுக்கு தலைவர்கள் எதிர்கட்சியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளதால் அந்த தீர்மானங்களை மாற்றுவதற்கு ஏதாவது ஏற்பாடுகள் உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு இரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் நியமிக்கப்படுவார்களா என்று மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பினார்.
அதேபோன்று, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்காக நிலையியற் கட்டளைகளில் மாற்றம் கொண்டு வரப்படுமா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.