இந்த ஆண்டு (2022) இலங்கையின் பொருளாதாரம் 2.6% வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
சர்வதேச நிதி நிறுவனத்தால் 2021 இல் கணிக்கப்பட்ட 3.6% இலிருந்து முன்னறிவிப்பு குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் உத்தேச நுகர்வோர் விலைகள் 17.6% என்று IMF மேலும் கூறியுள்ளது.
தற்போது நிலுவையில் இருக்கின்ற கடன்களுக்கான இலங்கையினுடைய சிறப்பு வரைதல் உரிமைகள் எதிர்வருகின்ற மாதம் 31 நிலவரப்படி US $ 892.28 மில்லியன் ஆகும் எனவும், இதற்கிடையில், நாட்டினுடைய சிறப்பு வரைதல் உரிமைகளானது 85.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று IMF மேலும் தெரிவித்தது.