நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் டொன் வரையான டீசல் மற்றும் பெற்றோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் டொன்னுக்கு மேலதிகமாக டீசலை விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு வரை தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களையும் எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி விநியோகிப்பதற்கு தம்மிடம் கையிருப்பு உள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை , எதிர்கால எண்ணெய் விநியோகத்திற்கு தேவையான கொள்முதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் எரிபொருள் இல்லையென பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.