COVID-19 தடுப்பூசியின் பாதகமான பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படாததால், கூடிய விரைவில் நான்காவது டோஸைப் பெறுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சகம் ஊக்குவிக்கிறது.
நான்காவது டோஸை இதுவரை குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பெற்றுக்கொண்டுள்ளதாகவும், மேலும் மூன்றாம் டோஸையும் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இப்போது தினமும் 100க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், பொதுமக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்களைப் பெறாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்றும் அவர் விளக்கினார்.