அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி இன்று கண்டியில் ஆரம்பமானது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று ஆரம்பமாகிறது.
குறித்த பேரணி, இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு முன்னெடுக்கப் படவுள்ளது.
இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகும் பேரணி மாவனெல்ல வரையில் பணயிக்கவுள்ளதுடன், நாளை மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் 28ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் பயணிக்கவுள்ளது.
தொடர்ந்து, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும் 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பயணிக்கும் பேரணி, கொழும்பில் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, தங்கள் பேரணி முடிவடையும் வரை அரச தலைவர் பதவி விலக கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அதற்கு பின்னரும் பதவி விலகவில்லை என்றால் கொழும்பில் அனைத்து மக்களையும் திரட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம்.